search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்னல் கோளாறு"

    • திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவை மதுராந்தகத்தில் நிறுத்தம்.
    • ரெயில்கள் புறப்படாமல் இருப்பதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    அதன்படி, ஜோத்பூர் நாகர்கோவில் விரைவு ரயில், தூத்துக்குடி விரைவு ரயில், ராமேஸ்வரம் விரைவு ரயில் மற்றும் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவை மதுராந்தகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

    சிக்னல் கோளாறு காரணமாக ரெயில்கள் புறப்படாமல் இருப்பதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    • வந்தே பாரத் ரெயில் 40 நிமிடம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நின்றன.
    • ரெயில்வே ஊழியர்கள் சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கோளாறை சரி செய்தனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள மேல்பாக்கம் ரெயில் நிலையத்தில் இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

    இதனால் சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை 20 நிமிடம் காலதாமதமானது.

    மேலும் அந்த வழியாக வந்த வந்தே பாரத் ரெயிலும் 40 நிமிடம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நின்றன.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கோளாறை சரி செய்தனர்.

    அதன் பின்னர் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதன் வழித்தடத்தில் இயக்கப்பட்டன.

    இதனால் ரெயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    • அடுத்தடுத்த அதி வரைவு ரெயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
    • ராமேஸ்வரம் சிறப்பு ரெயில்களும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    விழுப்புரம் ரெயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக அடுத்தடுத்த அதி வரைவு ரெயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    தாதர் சாளுக்கியா, அனந்தபுரி எக்ஸ்பிரஸ், செங்கோட்டை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகிய 4 ரெயில்கள் 40 நிமிடம் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    அடுத்தடுத்து பொதிகை எக்ஸ்பிரஸ், கம்பன் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் சிறப்பு ரெயில்களும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    • நெல்லைக்கு தினமும் காலை 6.45 மணிக்கு வந்து சேரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக 7.45 மணிக்கு வந்தடைந்தது.
    • தினமும் காலை 6.15 மணிக்கு நெல்லை வந்து சேரவேண்டிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக 7.15 மணிக்கு வந்து சேர்ந்தது.

    நெல்லை:

    தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டத்தில் நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு வடமாநிலங்கள் மற்றும் வட மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ரெயில்கள் ஒரு சில நேரங்களில் சிக்னல் கோளாறு, பேரிடர் காலங்களில் சிறிது தாமதமாக ரெயில் நிலையங்களை வந்தடையும். அந்த வகையில் மதுரை கூடலூர் பகுதியில் ஏற்பட்ட மின்சாரம் மற்றும் சிக்னல் கோளாறு காரணமாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இன்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை காலதாமதமாக வந்தடைந்தது.

    நெல்லைக்கு தினமும் காலை 6.45 மணிக்கு வந்து சேரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக 7.45 மணிக்கும், தினமும் காலை 6.15 மணிக்கு நெல்லை வந்து சேரவேண்டிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக 7.15 மணிக்கு வந்து சேர்ந்தது.

    தினமும் அதிகாலை 5.50-க்கு நெல்லை சந்திப்பு ரெயில்நிலையத்திற்கு வந்து சேரும். பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் 1.20 மணி நேரம் தாமதமாக 7 மணிக்கும், காலை 6.50-க்கு வந்து சேர வேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக 8 மணிக்கும் வந்து சேர்ந்தது. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். சிலர் கைக்குழந்தைகளுடன் அவதிப்பட்டனர்.

    • 4 மின்சார ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ‌இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
    • மழைக் காலங்களில் இது போன்ற சிக்னல் கோளாறுகளால் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன.

    அரக்கோணம்:

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகில் இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக கோயம்புத்தூர் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ், மைசூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    மேலும் 4 மின்சார ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ‌இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    சிக்னல் கோளாறு சீரமைக்கப்பட்ட பிறகு 40 நிமிடம் தாமதமாக இந்த ரெயில்கள் புறப்பட்டு சென்றன.

    மழைக் காலங்களில் இது போன்ற சிக்னல் கோளாறுகளால் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன. தொடர்ந்து சிக்னல் கோளாறு இல்லாமல் இருக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    மெட்ரோ ரெயில் பாதையில் ஒரே வாரத்தில் 3 தடவை சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் 30 நிமிடங்கள் வரை பயணிகள் சேவை முடங்கியது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர் மட்டப் பாதையிலும், திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. மேலும் சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவையை விரிவுப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.

    தற்போது மெட்ரோ ரெயில் பாதையில் ஒரே வாரத்தில் 3 தடவை ‘சிக்னல்’ கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் 30 நிமிடங்கள் வரை பயணிகள் சேவை முடங்கியது.

    கடந்த 8-ந்தேதி 30 நிமிடங்களும், 11-ந்தேதி 25 நிமிடங்களும் நேற்று 12-ந்தேதி 30 நிமிடங்களும் சிக்னல் கோளாறால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. இதனால் மெட்ரோ ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்றன. மெட்ரோ பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.

    இதுகுறித்து மெட்ரோ பயணி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மாநகரத்தில் விரைவு பயணத்துக்காக மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவையில் அடிக்கடி சிக்னல் கோளாறு ஏற்பட்டு வருவதால் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒரே வாரத்தில் 3 முறை சிக்னல் கோளாறு என்பது ஏற்புடையது அல்ல.

    மெட்ரோ ரெயில்கள் ஆங்காங்கே நடு வழியில் சிக்னல் கோளாறு ஏற்பட்டு நிறுத்தப்படுவதால் பயணிகள் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. இதனால் மெட்ரோ ரெயில் மீது நம்பகத்தன்மை குறையும். பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மெட்ரோ ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
    மெட்ரோ ரெயில் பாதையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே வாரத்தில் 2 முறை சேவை பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் உடனடியாக பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். #Metrotrain
    சென்னை:

    மெட்ரோ ரெயிலில் அடிக்கடி சிக்னல் கோளாறு ஏற்பட்டு 2 முறை பயணிகள் சேவை 20 நிமிடங்கள் பாதிப்படைந்துள்ளது.

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும் திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ்.வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பொதுமக்கள் - பயணிகள் இடையே வரவேற்பு ஏற்பட்டதையொட்டி மெட்ரோ ரெயில் திட்டம் சென்னை மாநகரம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பாதையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே வாரத்தில் 2 முறை பயணிகள் சேவை பாதிக்கப்பட்டது. 20 முதல் 25 நிமிடங்கள் வரை போக்குவரத்து சேவை முடங்கியது.

    கடந்த 8-ந்தேதி அன்று 30 நிமிடங்களும் நேற்று (11-ந்தேதி) 25 நிமிடங்களும் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்படைந்துள்ளது. இதனால் பயணிகள், பொதுமக்கள் தவித்தனர்.

    இது குறித்து பயணி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மாநகரத்தில் மெட்ரோ ரெயில் சேவை பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வந்தது. ஒரே வாரத்தில் 2 முறை சிக்னல் கோளாறால் பயணிகள் சேவையில் பாதிப்பு என்பது அதிர்ச்சியை தருகிறது. இதனால் மெட்ரோ ரெயில் மீது நம்பகத்தன்மை குறைந்து விடும். எனவே அதிகாரிகள் உடனடியாக இது போல் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Metrotrain

    ×